Monday, 7 October 2024

சாத்தானைப் போற்றுவோம்


ஒலித்துக் கொண்டிருந்தது USB டிரைவ். "நல்ல பொழுதையெல்லாம் தூங்கி கெடுத்தவர்கள் நாட்டைக் கெடுத்ததுடன் தானும் கெட்டார்" என்று பாடிக் கொண்டிருந்தது.

 இந்தப் பாடல்  இன்றைய 'அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தினரின்' இதய தெய்வமாகிய எம்ஜிஆர் நடித்த "நாடோடி மன்னன்" திரைப்படத்திற்காக பட்டுக்கோட்டையார் எழுதிய பாடல். கூடவே, கமலஹாசன் நடித்த 'தூங்காதே தம்பி தூங்காதே' என்ற திரைப்படத்தில் வரும் 'தூங்காதே தம்பி தூங்காதே' என்ற பாடலில் 'பட்டுக்கோட்டை வார்த்தைகளை போட்டு நம்ம புரட்சியாரு பாடி வச்ச பாட்டு' என்ற பாடல் வரியும் நினைவுக்கு வந்தது.. பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் மிகச் சிறந்த பொதுவுடமைவாதி என்ற போதும் அவரின் கொள்கை பரப்புச் செயலாளர் போல உள்வாங்கி நடித்து இருந்தவர் எம் ஜி இராமச்சந்திரன் ( M G R)என்றால் அது மிகையாகாது.

"சரி, இதற்கும் நீங்கள் கூறுவதற்கும் என்ன தொடர்பு " என்று கேட்கின்றீர்களா? .அதாவது, இங்கிலாந்திலே ஒரு பொன்மொழி இருக்கின்றது. அது என்னவென்றால், 

★ சோம்பல் உள்ள மனிதனை சைத்தான் கண்டால் அவனுக்கு ஏதாவது ஒரு வேலையை கொடுத்து விடுவார்★ என்பதுதான் அது. இதிலிருந்து ஒரு உண்மை தெரிகிறது. ஆகவே, கடவுளை போற்றுவதை விட்டுவிட்டு சைத்தானை போற்றுவோம். இன்னும் சொல்லப்போனால், 'தூங்காதே தம்பி தூங்காதே சோம்பேறி என்ற பெயர் வாங்காதே'  என்று பாடல் வருகிறது. 

அதனால்,வேலை வேலை என்று உழைத்துக் கொண்டு இருப்பவன் சைத்தானா? அல்லது வேலையே தராமல் இருப்பவன் கடவுளா? என்ற கேள்வி எழுகின்றது.  அதிலிருக்கும் உண்மை புரிகின்றதா?

 யோசிக்கிறேன்,. யோசிக்க முடியுமா உங்களால்? அப்படியானால் பதில் தாருங்கள்.

சாத்தானைப் போற்றுவோம்

ஒலித்துக் கொண்டிருந்தது USB டிரைவ். "நல்ல பொழுதையெல்லாம் தூங்கி கெடுத்தவர்கள் நாட்டைக் கெடுத்ததுடன் தானும் கெட்டார்" எ...